E2M1 01 01 2020

உலகிற்கு உணவு வழங்கும் விவசாயிகள் தமக்கு நன்மை செய்த சூரியதேவனுக்கு நன்றி தெரிவிக்கும் நன்றிப் பெருநாளாம் தைப்பொங்கல் தினத்தை கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம் வருடாந்தம் சிறப்பாக கொண்டாடி வருகின்றது. 

இந்த வகையில் 2020ஆம் ஆண்டுக்கான தைப்பொங்கல் நிகழ்வுகள் கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் திரு. ஐ. மு. பு. முத்துபண்டா அவர்கள் தலைமையில்  அம்பாறை மாவட்டத்தின் நாவிதன்வெளி பிரதேச செயலகத்தின் மத்திய முகாம் - 02 ஸ்ரீமுருகன் ஆலயத்தில் 2020.01.23 ஆம் திகதி வியாழக்கிழமை காலை தொடக்கம் வெகுவிமர்சையாக நடைபெற்றது.

பாரம்பரிய முறையில் கதிரறுத்து, நெல்குற்றி, ஸ்ரீமுருகன் ஆலயத்திற்கு எடுத்து வரப்பட்டு புதிய பொங்கல் பானையில் பொங்கப்பட்டது. ஆலய பிரதம குருவின் சமய வழிபாட்டுடன்  நடைபெற்ற இந் நிகழ்வில் மத்திய முகாமின் பல பகுதிகளிலும் இருந்து பொது அமைப்புக்கள், அரச நிறுவனங்கள் சார்பில் பல பொங்கல் பானைகளில் பொங்கல் விழா நடைபெற்றதுடன், பிரதேசத்தின் கலைஞர்களால் பாரம்பரிய கலை நிகழ்வுகள், பாரம்பரிய விளையாட்டுக்கள், இலக்கிய ஆற்றுகைகள் என்பவை நடாத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
   
இந் நிகழ்வில் கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் மாகாணப் பணிப்பாளர் திரு. ச. நவநீதன் அவர்கள், அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர்கள், நாவிதன்வெளி பிரதேச செயலாளர் திரு. ளு. ரங்கநாதன் அவர்கள், கல்முனை வடக்கு பிரதேச செயலாளர் திரு. ஜே. அதிசயராஜ் மற்றும் வலயக்கல்விப் பணிப்பாளர்கள், உட்பட்ட பலர் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்

 

 

 

E2M2 01 01 2020

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

E2M3 01 01 2020

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

  

 

 E2M4 01 01 2020

 E2M5 01 01 2020


© Provincial Planning Secretariat - EPC