E1M1“இன்றைய வாழ்வியலில் ஆணுக்கு பெண்கள் சமன்” என்னும் கருப்பொருளில் உலகெங்கணும் “சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்பட்டு வருகின்றது. இந்த வகையில் 2020ஆம் ஆண்டு சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு கிழக்கு மாகாண கல்வித் திணைக்களத்தில்  2020.03.10ஆம் திகதி திங்கட்கிழமை கிழக்கு மாகாண அரச உத்தியோகத்தர்களை மையப்படுத்தியதாக இந் நிகழ்வு ஒழுங்குபடுத்தப்பட்டிருந்தது.

கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் திரு. ஐ. மு. பு. முத்துபண்டா அவர்கள் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் தமிழ் மொழியில் சிறப்புரையை கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் சிரேஸ்ட உதவிச் செயலாளர் திரு. வெ. தவராஜா அவர்களும் சிங்கள மொழி மூல சிறப்புரையை கிழக்கு மாகாண உள்ளுராட்சித் திணைக்களத்தில் கடமையாற்றும் செல்வி. சஸ்தரா அபிமானி அவர்களும் நிகழ்த்தினர். இந்நிகழ்வில் பிரதிப் பிரதம செயலாளார்கள் பேரவைச் செயலாளர் மற்றும் ஏனைய திணைக்களங்களைச் சர்ந்த பல உயரதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
 
சிறப்பு நிகழ்வாக கிழக்கு மாகாண கல்விப்பணிப்பாளர் ஜனாப். ஆ. மு. ஆ. மன்சூர் அவர்கள் தலைமையில் “இக்கால பெண்களுக்கு சுதந்திரம் கிடைத்துள்ளது , கிடைக்கவில்லை” என்னும் தலைப்பில் பட்டிமன்றம் நடைபெற்றது.

இதில் வாதிகளாக திரு.மூ.கோபாலரெட்ணம் செயலாளர் , பேரவைச்செயலகம், திருமதி. சந்திரலதா ஆசிரியை தி/செல்வநாயகபுரம். தமிழ் மகா வித்தியாலயம், திருமதி. காயத்திரி நளினகாந்தன் ஆசிரியை தி/ விபுலானந்தா வித்தியாலயம் ஆகியோரும்,  பிரதிவாதிகளாக,  திரு.ச.நவநீதன் மாகாணப் பணிப்பாளார் ,பண்பாட்டலுவல்கள்  திணைக்களம், Eng. ஏ. எஸ். கௌரிபாலன், உள்ளூராட்சித் திணைக்களம், திருமதி. வசந்தி சனசமூக உத்தியோகத்தர்- கி.மா.  ஆகியோருடன் கிழக்கு மாகாண கல்வி அமைச்சு மற்றும் கல்வித்திணைக்களத்தின் உத்தியோகத்தர்கள் பலரும் பங்குபற்றியிருந்தனர்.  

 

E1M2

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

E1M3

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

  

 

 E1M4


© Provincial Planning Secretariat - EPC