E3M1கிழக்கு மாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை அமைச்சின் பண்பாட்டலுவல்கள் திணைக்களம் இலக்கிய உலகிற்கு அர்ப்ணிப்புமிகு சேவையாற்றிய அறிஞர் பெருமக்களின் சேவையை கௌரவிக்கும் முகமாக கிழக்கு மாகாணத்தின் மூவின கலைஞர்களின் பெயரில் இலக்கிய உலகிற்கு அவசியமான ஆய்வு ரீதியான கருத்துரைகளையும், கருத்தாடல்களையும் நடாத்தி வருகின்றது.

இந்த வகையில் இரண்டாவது தொடர் நினைவுப் பேருரை அம்பாறை மாவட்டம் கல்முனை உவெஸ்லி கல்லூரியின் நல்லதம்பி மண்டபத்தில்  2020.03.07ஆம் திகதி சனிக்கிழமை மாலை 03.00 மணிக்கு “டாக்டர்.எம்.முருகேசபிள்ளை அரங்கில்” கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் மாகாணப் பணிப்பாளர் திரு. ச. நவநீதன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது

இந்நிகழ்வின் அரங்க அறிமுகத்தினை கிழக்கின் கலை ஆளுமை திரு. உமா வரதராஜன் அவர்களும் பேருரையாளார் அறிமுகத்தினை ஓய்வூநிலை கோட்டக்கல்விப்பணிப்பாளர் ஜனாப். ஏ. பீ முகமட் அவர்களும், பேராசிரியர் சி. மௌனகுரு அவர்கள் “பண்பாட்டியமும் கிழக்கு பண்பாடும்”  என்னும் தலைப்பில்  தொடர்  நினைவுப் பேருரையையும் நிகழ்த்தினார்கள். இந்நிகழ்வில் கிழக்கு மாகாண சபையின் பேரவைச் செயலாளர் பிரதேச செயலாளர்கள் வலயக்கல்விப் பணிப்பாளர்கள் அதிபர்கள் உட்பட்ட பல கலை இலக்கியவாதிகள் விமர்சகர்கள் , கலாசார உத்தியோகத்தர்கள் என்போர் பங்குபற்றி நிகழ்வை சிறப்பித்தனர்.

 

 

E3M2

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

E3M3

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

  

 

 E3M4


© Provincial Planning Secretariat - EPC