E2M1

 

கிழக்கு மாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை அமைச்சின் பண்பாட்டலுவல்கள் திணைக்களம் இலக்கிய உலகிற்கு அர்ப்பணிப்புமிகு சேவையாற்றிய அறிஞர் பெருமக்களின் சேவையை கௌரவிக்கும் முகமாக கிழக்கு மாகாணத்தின் மூவின கலைஞர்களின் பெயரில் இலக்கிய உலகிற்கு அவசியமான ஆய்வு ரீதியான கருத்துரைகளையும் கருத்தாடல்களையும் நடாத்தி வருகின்றது.

இந்த வகையில் முதலாவது தொடர் நினைவுப்பேருரை 2020.02.23ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 09.30 மணிக்கு மட்டக்களப்பு மாநகர சபை மண்டபத்தில் “தியாகராஜா அரங்கில்” கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் மாகாணப் பணிப்பாளர் திரு. ச. நவநீதன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
                  
இந்நிகழ்வின் அரங்க அறிமுகத்தினை கிழக்கு மாகாண கல்விப்பணிப்பாளர் ஜனாப். ஆ. மு. ஆ. மன்சூர் அவர்களும், பேருரையாளர், அறிமுகத்தினை கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் சிரேஸ்ட உதவிச் செயலாளர் திரு. வெ. தவராஜா அவர்களும் “பண்பாட்டியமும் கிழக்கு பண்பாடும்”  என்னும் தலைப்பில் நினைவுப் பேருரையை பேராசியர் சி. மௌனகுரு அவர்களும் நிகழ்த்தினார்கள். இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாநகர சபை முதல்வா; திரு. தி. சரவணபவன், வடக்கு - கிழக்கு மாகாணத்தின் முன்னாள் பிரதம செயலாளர் திரு. ஜீ. கிருஸ்ணமூர்த்தி உட்பட பல கலை இலக்கியவாதிகள் விமர்சகர்கள், கலாசார உத்தியோகத்தர்கள் என்போர் பங்குபற்றி நிகழ்வை சிறப்பித்தனர்

 

 

E2M2

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

E2M3

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

  

 

 E2M4


© Provincial Planning Secretariat - EPC