a

கிழக்கு மாகாண தொழில்துறைத்திணைக்களத்தினால் வருடாந்தம் நடாத்தப்படும்  கிழக்கு கைத்தொழில் கண்காட்சி என்ற தொனிப் பொருளிலான மாபெரும் கண்காட்சியானது இந்த வருடம் செப்டெம்பர் மாதம் 05 , 06 , மற்றும்  07 ஆம் திகதிகளில்  மட்டக்களப்பு மாவட்டத்தில்  அமைந்துள்ள தொழில்துறைத்திணைக்கள வளாகத்தில் நடாத்தப்பட்டது. 

கிழக்கு மாகாண  மாவட்டங்களின் உள்ளூர் உற்பத்தி மற்றும் சிறுகைத்தொழில்  முயற்சியாளர்கள் திணைக்களத்தின் நிலைய போதனாசிரியர்கள்,தேசிய அருங்கலைகள் பேரவையில்  பதியப்பட்ட கைவினைஞர்கள் ஆகியோரின் பங்குபற்றுதலுடன்  கைத்தறி நெசவு உற்பத்திகள்,களிமண் உற்பத்திகள், தும்பு ஓலை சார்ந்த உற்பத்திகள், உலோகக் கைப்பணிப்பொருள்கள், ஆடை ஆபரணங்கள், சிப்பியிலான கைப்பணிப்பொருள்கள், மர உற்பத்திகள்,தோற்பொருட்கள்,உணவு  பதனிடல், அலங்கார கல்லினால் செய்யப்பட்ட உற்பத்திப் பொருட்கள் என்பன இந்தக் கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டன. 

கிழக்கு மாகாண தொழில்துறை திணைக்களப் பணிப்பாளர் திருமதி கவிதா உதயகுமார்  மற்றும் மட்டக்களப்பு மாவட்ட தொழில்துறைத்திணைக்கள உதவிப்பணிப்பாளர்  திரு கே. இளம்குமுதன் அவார்களினால் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு,கிழக்கு மாகாண உள்ளுராட்சி மற்றும்கைத்தொழில் அமைச்சின் செயலாளர்  ஜனாப் U. L. A.அஸீஸ் அவார் களின் தலைமையில் நடைபெற்ற இக்கண்காட்சியானது , கௌரவ கிழக்கு மாகாண ஆளுநர்  ஷான் விஜேலால் டி சில்வா அவர்களினால் செப்டெம்பர் மாதம் 05 ஆம் திகதி வியாழக்கிழமை காலை 9.30 மணியளவில் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.

 

d

 

c

b

e

 

© Provincial Planning Secretariat - EPC