தூர நோக்கு
தரமான சுதேச மருத்துவ சேவை ஊடாக ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்குதல்.

பணிக்கூற்று

அங்கிகரிக்கப்பட்ட பாரம்பரிய, சுதேச வைத்திய முறையினுடாக நோய்களை குணமாக்கவும், நோய்கள் வராமல் தடுக்கவும் இலகுவில் பெற்றுக்கொள்ளக் கூடியதுமான சுதேச மருத்துவ சேவையை நிலைபெறத்தக்க வகையில் வலுப்படுத்தல்.


முனைவுப்பகுதி - 1  : நம்பகமான தரமான சுதேச மருத்துவ சேவையினை வழங்குதல்.
      
இலக்குகள்  
- மேம்படுத்தப்பட்ட தரமான சுதேச மருத்துவ சிகிச்சைகளை வழங்குதல்..
- மேம்படுத்தப்பட்ட தரமான சுதேச மருத்துவ நோய் வருமுன் காத்தல் நடைமுறைகள்.
- ஓருங்கிணைந்த வைத்தியசாலைகளின் விரிவாக்கம். (மேலைத்தேய மற்றும் சுதேச).
- மேம்படுத்தப்பட்ட சுதேச மருத்துவ கல்வி நடைமுறைகள்.
    
முனைவுப்பகுதி - 2   : மேம்படுத்தப்பட்ட ஆயள்வேத மருத்துவ சுற்றுலாத்துறை.
      
இலக்குகள்
- மேம்படுத்தப்பட்ட விசேட சுதேச மருத்துவ சிகிச்சைப் பிரிவுகள்.
- உள்நாட்டு தனியார் விவசாயிகளின் பங்களிப்புகளுடன் வர்த்தக ரீதியில் பாதுகாக்கப்பட்ட மூலிகைப் பயிர்ச்செய்கை.
- வெளிநாட்டு நிறுவனங்களின் அனுசரணையுடன் ஆயள்வேத மருத்துவ உத்தியோகத்தார்களுக்கான வெளிநாட்டுப் பயிற்சிகளை வழங்குதல்.

முனைவுப்பகுதி - 3   : தன்னிறைவானதும் வர்த்தக நோக்கிலானதுமான சுதேச மருத்துவ உற்பத்திப் பொருட்கள்.
      
இலக்குகள்
- ஒவ்வொரு சுதேச மருத்துவ நிறுவனங்களிலும் விரிவாக்கப்பட்ட மூலிகைத் தோட்டங்கள்.
- ஒவ்வொரு மாவட்டங்களிலும் விரிவாக்கப்பட்ட பாரிய அளவிலான மூலிகைத் தோட்டங்களின் உருவாக்கம்.
ஒவ்வொரு மாவட்டங்களிலும் சுதேச மருத்துவ உற்பத்திப் பொருட்களுக்கான விற்பனை நிலையங்களின் உருவாக்கம்.

முனைவுப்பகுதி - 4   : செறிவுபடுத்தப்பட்ட வலுவாக்கப்பட்ட மற்றும் மேம்படுத்தப்பட்ட அங்கிகரிக்கப்பட்ட பாரம்பரிய மருத்துவ சிகிச்சை முறைகள்.

இலக்குகள்
- விசேட பாரம்பரிய வைத்திய நிபுணர்களிடம் இருந்து சேவைகளைப் பெற்றுக்கொள்ளல்.
- பாரம்பரிய மருத்துவ ஓலைச் சுவடிகளை அச்சிடல் மற்றும் மென்தட்டில் பதிவேற்றல்.
- பாரம்பரிய வைத்திய நடைமுறைகளுக்கான உபகரணங்களை வழங்குதல்.

முனைவுப்பகுதி - 5   : அபிவிருத்தி செய்யப்பட்ட மற்றும் நன் நடைமுறைகளை உடைய நிறுவனங்கள்.
      
இலக்குகள்
- ஊழியர்கள் மற்றும் உத்தியோகத்தர்களுக்கான திறன் அபிவிருத்தி செயற்பாடுகள் மற்றும் பயிற்சிகள்.
- மேம்படுத்தப்பட்ட அலுவலக நடைமுறைகள்.
- விரிவுபடுத்தப்பட்ட சுதேச மருத்துவ வைத்தியசாலைகளின் இணைய வழியிலான தரவுகளைப் பதிவேற்றல்.

© Provincial Planning Secretariat - EPC