2

கௌரவ ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் அவர்களின் பணிப்புரையின் கீழ் சர்வதேச சுற்றுலா பயணிகளைக் கவரச்செய்து மேலும் அவர்களதுவருகையை கிழக்கில் உறுதி செய்யும் வகையில் “Raid Amazons” எனும் 19வது சர்வதேச நிகழ்வை கிழக்கு மாகாண சுற்றுலா பணியகம் முன்னின்று நடாத்தவுள்ளது.

இந்நிகழ்வானது மார்ச் 23 தொடக்கம் 31ஆம் திகதி வரை கிழக்கில் குறிப்பாக பாசிக்குடா தொப்பிகல மற்றும் கல்குடா ஆகிய பகுதிகளில் இடம்பெறவிருக்கிறது. முப்படையின் பாதுகாப்பு உதவியோடு கிழக்கு மாகாணத்திற்கு பெருமை சேர்க்கும் வகையில் இந்நிகழ்வானது அமைய இருக்கிறது.இந்நிகழ்வில் ஐரோப்பாவை சேர்ந்த 300க்கு மேற்பட்ட பெண் வீராங்கனைகள் பங்குபற்றவுள்ளனர். Raid Amazons 18வது நிகழ்வானது சென்ற ஆண்டு இலங்கையில் கிழக்கு மாகாணத்தில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது அதன் தொடராக 19வது நிகழ்வு  தற்போது நடைபெறவுள்ளது. மேலும்  இந்நிகழ்வில் வில்லாண்மை,ஓட்டப்போட்டி, தோணி ஓட்டம், மலையில் சைக்கிள் ஓட்டம் போன்ற தனி மற்றும் குழு ரீதியிலான விளையாட்டுக்களோடு மேலும்  பல கேளிக்கை நிகழ்வுகளும் இடம்பெறவுள்ளது.

 

 

 

 

 

5

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

1

7

© Provincial Planning Secretariat - EPC