a.460x320உயிர்த்த ஞாயிறு அன்று இடம்பெற்ற தாக்குதலின் பின் இலங்கை சுற்றுலாத்துறையின் பின்னடைவை மீள்கட்டியெழுப்புதல் தொடர்பான கலந்துரையாடல் திருகோணமலையில் கிழக்கு மாகாண சுற்றுலாப் பணியகத்தின் தலைவர் இந்திக நளின் அவர்களின் தலைமையில் 2019.06.20 அன்று நடைபெற்றதாக கிழக்கு மாகாண சுற்றுலாப் பணியகத்தின் பொது முகாமையாளர் ஏ.எஸ்.எம்.பாயிஸ் தெரிவித்தார்.இந்நிகழ்வில் பிரதம் விருந்தினராக கௌரவ கிழக்கு மாகாண ஆளுநர் ஷான் விஜயலால் டி சில்வா  அவர்கள் தனது விஷேட உரையை நிகழ்த்தினார். மேலும் இந்நிகழ்வில் கிழக்கு மாகாண உள்ளுராட்சி மற்றும் சுற்றுலாத்துறை இமைச்சின் செயலாளர் யூ.எல்.ஏ.அஸீஸ் அவர்களுடன் ஏனைய அமைச்சுகளின் செயலாளர்கள், பிரதிப் பிரதம செயலாளர்கள்,திணைக்களத்தலைவர்கள்,சுற்றுலாத்துறையின் பங்காளர்களான Hotel உரிமையாளர்கள், வர்த்தக சம்மேளன உறுப்பினர்கள் ,பல வங்கிகளின் மாகாண முகாமையாளர்கள் மத்திய சுற்றுலா அமைச்சின் உத்தியோகத்தர்கள், ஏனைய மாகாணங்களின் உத்தியோகத்தர்கள், பாதுகாப்புப் படை உயரதிகாரிகள், மற்றும் பிரதேச சபையின் தவிசாளர்களும் கலந்து கொண்டனர்.மேலும் இந்நிகழ்விற்கு அவுஸ்திரேலியா உதவித்திட்டத்தின் கீழ் இயங்கி வரும் வளர்ச்சிககான தொழில்நுட்ப அறிவு விருத்தி நிறுவனம் நிதியுதவி வழங்கி வருகின்றதும் குறிப்பிடத்தக்கது.இந்நிகழ்வானது, கிழக்கு மாகாணத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதாகவும் சுற்றுலாத்துறையை விருத்தி செய்வதற்கான வாய்ப்புக்களை உருவாக்கியுள்ளதாகவும்,தனியார் அரச கூட்டு நடவடிக்கைகளைபலப்படுத்துவதாக அமைந்துள்ளதாகவும் இந்நிகழ்வில் பங்கு பற்றியோர்கள் தெரிவித்துள்ளனர்.

 

b.460x320

c.460x320

 

 d.460x320

 
WhatsApp Image 2019 06 24 at 10.38.23 AM

 

© Provincial Planning Secretariat - EPC