b.460x320

திருகோணமலை மாவட்டத்திலுள்ள சுற்றுலாத்துறை சேவை வழங்குனர்களின் திறனை விருத்தி செய்தல் தொடர்பான 03 நாட்கள் பயிற்சி நெறி திருகோணமலை குளக்கோட்டம் பயிற்சி நிலையத்தில் நடைபெற்றது.இப் பயிற்சி நெறியின் ஆரம்ப வைபவத்தில் சுற்றுலாப் பணியகத்தின் பொது முகாமையாளர் A.S.M.Fayis உட்பட அவுஸ்ரேலிய தொண்டர் Ms.Lisa Whyte சுற்றுலாத்துறை நிபுணன் Mr.Pascal Gavotto சுற்றுலாப் பணியகத்தின் அபிவிருத்தி உத்தியோகத்தர் Mr.Yaseer ஆகியோர் பங்கு பற்றினர்.

சுற்றுலாப் பணியகத்தின் பொது முகாமையாளர் A.S.M.Fayis உரையாற்றிய போது இலங்கையில் உயிர்த்த ஞாயிறு அன்று இடம்பெற்ற தாக்குதலினால் பின் தங்கிய சுற்றுலாத்துறையை கட்டியெழுப்பும் நோக்கோடும் சேவை வழங்குனரின் தரத்தினை மேம்படுத்தும் நோக்கோடும் இப்பயிற்சி நெறி வழங்கப்படுவதாகவும், கிழக்கு மாகாணத்தின் சுற்றுலாத்துறையை விருத்தி செய்வதற்கான வாய்ப்புக்களை உருவாக்கியுள்ளதாகவும், தனியார் அரச கூட்டு நடவடிக்கைகளை பலப்படுத்துவதாக அமைந்துள்ளதாகவும் அவர் தமது உரையில் தெரிவித்தார்.

 

c.460x320மேலும், இப் பயிற்சி நெறியானது 03 மாவட்டங்களுக்குமாக ஒழுங்கமைக்கப்பட்டதுடன் மட்டக்களப்பு, அம்பாறை போன்ற மாவட்டங்களின் பயிற்சி நெறிகள், எதிர்வரும் காலங்களில் நடைபெறும் எனவும், இப் பயிற்சி நெறியில் சுற்றாடல், பாதுகாப்பு, கலாச்சாரம் தொடர்பான விடயங்களும், கிழக்கிலங்கையின் சுற்றுலா தொடர்பான தகவல்களும், மற்றும் சுற்றுலாத் துறையின் இன்றைய நிலை,  சர்வதேச அளவிலான சுற்றுலா தொடர்பான பயிற்சிகளும் அளிக்கப்பட்டன.

இப்பயிற்சி நெறியில் விடுதி உரிமையாளர்கள், வாகன செலுத்துனர்கள், SPA உரிமையாளர்கள், உணவக உரிமையாளர்கள், பயண முகவர்கள், படகு செலுத்துனர்கள், சிறிய நடுத்தர வியாபார உரிமையாளர்கள் போன்றோர் கலந்து பயிற்சி பெற்றனர்.இதற்காக கிழக்கு பல்கலைக்கழக திருகோணமலை வளாக சிரேஷ்ட விரிவுரையாளர் T.Baskar கலாச்சாரத் திணைக்கள விரிவுரையாளர் Mr.Gunabala, Mr.Gopuhan(PHI), அவுஸ்ரேலிய தொண்டர் Ms.Lisa Whyte சுற்றுலாத்துறை நிபுணன் Mr.Pascal Gavotto(S4IG) போன்றோர் விரிவுரையாளர்களாக செயற்பட்டு பயிற்சிகளை அளித்தனர்.

 

 d.460x320

e.460x320

 

 f.460x320

© Provincial Planning Secretariat - EPC