கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தில் கடமையாற்றும் திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களில் கடமையாற்றும் மூவின கலாசார உத்தியோகத்தர்களுக்கான காலாண்டு கலந்துரையாடல் கிழக்கு மாகாண பண்பாட்டலுல்கள் திணைக்களத்தில் 2020.08.11ஆம்இ 13ஆம் திகதிகளில் கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்திலும் மற்றும் கல்முனை- வடக்கு பிரதேச செயலகத்திலும் கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் மாகாணப் பணிப்பாளர் திரு.ச.நவநீதன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
“இன்றைய வாழ்வியலில் ஆணுக்கு பெண்கள் சமன்” என்னும் கருப்பொருளில் உலகெங்கணும் “சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்பட்டு வருகின்றது. இந்த வகையில் 2020ஆம் ஆண்டு சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு கிழக்கு மாகாண கல்வித் திணைக்களத்தில் 2020.03.10ஆம் திகதி திங்கட்கிழமை கிழக்கு மாகாண அரச உத்தியோகத்தர்களை மையப்படுத்தியதாக இந் நிகழ்வு ஒழுங்குபடுத்தப்பட்டிருந்தது.