தொடர் நினைவுப் பேருரை அம்பாறை மாவட்டம் கல்முனை உவெஸ்லி கல்லூரியின் நல்லதம்பி மண்டபத்தில் 2020.03.07ஆம் திகதி சனிக்கிழமை மாலை 03.00 மணிக்கு “டாக்டர்.எம்.முருகேசபிள்ளை அரங்கில்” கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் மாகாணப் பணிப்பாளர் திரு. ச. நவநீதன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
இந்த வகையில் முதலாவது தொடர் நினைவுப்பேருரை 2020.02.23ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 09.30 மணிக்கு மட்டக்களப்பு மாநகர சபை மண்டபத்தில் “தியாகராஜா அரங்கில்” கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் மாகாணப் பணிப்பாளர் திரு. ச. நவநீதன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.