கிழக்கு மாகாண கிராம அபிவிருத்தித் திணைக்களத்தின் IUDP – 2021 திட்டத்தின் கீழ் திருக்கோவில் பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ள தங்கவேலாயுதபுரம் கிராமத்தில் புனரமைப்புச் செய்யப்பட்ட பாடசாலை வீதி மற்றும் வாசிகசாலை என்பவற்றின் திறப்பு நிகழ்வு 27.01.2022 அன்று இடம்பெற்றது.
இந்நிகழ்வானது தங்கவேலாயுதபுரம் வடக்கு மற்றும் தெற்கு கிராம அபிவிருத்திச் சங்கங்களின் ஏற்பாட்டில் அம்பாறை மாவட்ட கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் திரு. M. T. A. நாஹிப் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வின் பிரதம அதிதியாக கிழக்கு மாகாண முதலமைச்சின் முன்னாள் செயலாளர திரு. U. L. A. அஸீஸ் அவர்கள் கலந்து கொண்டார். விசேட அதிதிகளாக கிழக்கு மாகாண கிராம அபிவிருத்தித் திணைக்களப் பணிப்பாளர் திரு. N. தனஞ்ஜெயன் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் திரு. K. மோகன் பிறேம்குமார் ஆகியோர் கலந்து சிறப்பித்திருந்தனர்.
மேலும் திருக்கோவில் பிரதேச செயலக நிர்வாக கிராம உத்தியோகத்தர் திரு.A.கந்தசாமி, ஆலையடிவேம்பு கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் திரு.P.கோபிகாந், திருக்கோவில் கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் திரு.K.தவப்பிரியன், அபிவிருத்தி உத்தியோகத்தர் திரு.K.கணேசன், அம்பாறை மாவட்ட கிராம அபிவிருத்தி அலுவலக தொழில்நுட்ப உத்தியோகத்தர் திரு.M.J.M.ஜரீன் மற்றும் தங்கவேலாயுதபுரம் கிராம உத்தியோகத்தர் திரு.T.சுதரசன் ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.