கிழக்கு மாகாண கிராம அபிவிருத்தி திணைக்களத்தின் தகவல் முகாமைத்துவ தரவுதளம், மாகாண பிரதம செயலக கூட்ட மண்டபத்தில் 17ம் திகதி, கிழக்கு மாகாண கௌரவ ஆளுநர் அனுராதா யஹம்பத் அவர்களால் உத்தியோகபூர்வமாக அங்குரார்ப்பணம் செய்யப்பட்டது.
கிழக்கு மாகாண முதலமைச்சின் செயலாளர் கலாமதி பத்மராஜா தலைமையில் நடைபெற்ற இன் நிகழ்வில், கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் பிரதம அதிதியாக கலந்துகொண்டு தகவல் முகாமைத்துவ தரவுத்தளத்தை அங்குரார்ப்பணம் செய்து வைத்தார்.
இதன்போது கிழக்கு மாகாண கிராம அபிவிருத்தி திணைக்களத்தின் மாகாணப் பணிப்பாளர் நாகராஜா தனஞ்ஜெயனினால் தகவல் முகாமைத்துவ தரவுத் தளம் ஆரம்பித்து வைப்பதன் நோக்கம் பற்றியும் தரவுத்தளத்தில் எவ்வாறு உள்நுழைதல் மற்றும் பதிவுகளை எவ்வாறு பதிவிடுதல் பற்றியும் விளக்கமளித்தார்.
கிழக்கு மாகாண கிராம அபிவிருத்தி திணைக்களத்தில் தகவல் முகாமைத்துவ முறைமையில் தரவுத்தளத்தில் கிராம மற்றும் மாதர் கிராம அபிவிருத்திச் சங்கத் தரவுகளை பதிவேற்றம் செய்ததில் மாகாணத்தில் முதல் பத்து இடங்களை பெற்ற அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கும் கிழக்கு மாகாண ஆளுநர் சான்றிதழ்களை வழங்கி வைத்தார்.