வடக்கு மாகாண கிராம அபிவிருத்தி திணைக்களத்தின் மாகாண பணிப்பாளர் திருமதி. நளாயினி இன்பராஜ் அவர்களின் அழைப்புக்கமைய 09.07.2020 அன்று வட மாகாண திணைக்களத்தின் தலைமைக் காரியாலயத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலில் கிழக்கு மாகாண கிராம அபிவிருத்தி திணைக்களத்தின் மாகாணப் பணிப்பாளர் என்.தனஞ்ஜெயன் கலந்து கொண்டார்.
கிழக்கு மாகாண கிராம அபிவிருத்தித் திணைக்களத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற "பசுமையான கிழக்கு" என்ற தொனிப்பொருளிலான மாகாண மரம் நடுகை நிகழ்ச்சித்திட்டம் - 2020 கிழக்கு மாகாண ஆளுனர் கௌரவ அனுராதா ஜெகாம்பத் அவர்களினால் இன்று (28.01.2020) மட்டக்களப்பில் ஆரம்பித்துவைக்கப்பட்டது.