கிழக்கு மாகாணத்தில் வினைத்திறனுடன் இயங்கி வருகின்ற கலை மன்றங்கள் பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் பதிவு செய்யப்படுவதுடன் அவற்றுக்குரிய சான்றிதழ்களும் வழங்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இந்த வகையில் 2020, 2021 ஆம் ஆண்டுகளுக்கான பதிவுச்சான்றிதழ் வழங்கும் நிகழ்வு கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தில் 2020.08.18ஆம் திகதி காலை 10.00 மணிக்கு திணைக்களத்தின் மாகாணப் பணிப்பாளர் திரு.ச.நவநீதன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
இந் நிகழ்வில் திருகோணமலை மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்ட 25 தமிழ் மொழிமூல கலை மன்றங்களின் தலைவர், செயலாளர் பங்குபற்றியிருந்தனர். இவர்களின் வாண்மையை விருத்தி செய்யும் நோக்கில் அவர்களுக்கான வழிகாட்டல் செயலமர்வினை கலாபூஸணம் சி. நவரத்தினம் (திருமலை நவம்) அவர்களினால் நடாத்தப்பட்டது.
இக் கலந்துரையாடலில் போது 2019ஆம் ஆண்டு செயற்படுத்தப்பட்ட செயற்றிட்டங்கள் மற்றும் 2020, 2021 ஆம் ஆண்டு காலத்தில் செயற்படுத்தப்படவுள்ள பண்பாட்டியல்சார் செயற்றிட்டங்கள் என்பன தொடர்பாக மன்றத்தின் பிரதிநிதிகளால் எடுத்துகூறப்பட்டது.