இந்த வகையில் முதலாவது தொடர் நினைவுப்பேருரை 2020.02.23ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 09.30 மணிக்கு மட்டக்களப்பு மாநகர சபை மண்டபத்தில் “தியாகராஜா அரங்கில்” கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் மாகாணப் பணிப்பாளர் திரு. ச. நவநீதன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
பொது நிர்வாகம் மற்றும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சின் தேசியஉற்பத்திதிறன் செயலகத்தினால் 2019ஆம் ஆண்டு நடாத்தப்பட்ட “தேசிய உற்பத்திதிறன் போட்டி-2018”ன் போது தேசிய மட்டத்தில் சிறப்பு சான்றிதழ் மெச்சுரை (Special Commendation) பெற்றமைக்கான சான்றிதழ் மற்றும் கேடயம் வழங்கும் நிகழ்வு திருகோணமலை மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் திருகோணமலை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திரு. கே. அருந்தவராசா, திருகோணமலை மாவட்ட செயலக திட்டமிடல் பணிப்பாளர் திருமதி.எஸ்.பரமேஸ்வரி சிரேஸ்ட கலாசார உத்தியோகத்தர் வி.குணபாலா, தேசிய உற்பத்தி திறன் செயலகத்தின் மாவட்ட இணைப்பாளர் ஜனாப்.எம்.நுஸ்றி ஆகியோர் பங்குபற்றியிருந்தனர்.