கிழக்கு மாகாணத்தில் நன்னீர் மீன்பிடித் துறையை துரித அபிவிருத்தி செய்யும் நோக்கில் கிழக்கு மாகாண மீன்பிடிப்பிரிவின் PSDG நிதி ஒதுக்கீட்டின் கீழ் திருகோணமலை மாவட்டத்தின் கோமரங்கடவல பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட மதவாச்சிய, புலிக்கண்டிய, பெத்தேவ ஆகிய குளங்களுக்கு முறையே 112,500, 75,000, 150,000 பெறுமதியான மீன்குஞ்சுகள் 10.06.2020, 26.06.2020 ஆகிய தினங்களில் இருப்பு செய்யப்பட்டன.