E1M1 10 03 2022

நாட்டில் தற்போது நிலவும் டொலர் நெருக்கடியை உள்ளுர் பொருளாதாரத்தைகட்டியெழுப்புவதற்கான வாய்ப்பாக பயன்படுத்திக்கொள்ள வேண்டுமென கௌரவ கிழக்குமாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் தெரிவித்துள்ளார். இதன் மூலம் நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப முடியும் எனவும் மேலும் தெரிவித்தார்.

திருகோணமலையிலுள்ள ஆளுநர் அலுவலகத்தில் 10-03-2022 அன்று இடம்பெற்ற விஷேட நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய கௌரவ ஆளுநர்,

“இன்று நாட்டில் டொலர் தட்டுப்பாடு நிலவுகிறது. இதை மறைப்பதற்கு எதுவும் இல்லை ஆனால் இந்த டொலர் நெருக்கடியை உள்ளுர் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கான வாய்ப்பாக நாம் பயன்படுத்தலாம்.

வெளிநாட்டு பொருட்களை நம்நாட்டிற்கு இறக்குமதி செய்ய இவ்வளவு டாலர்களை செலவு செய்துள்ளோம். இதன் விளைவாக, எங்கள் உள்ளூர்தயாரிப்புகள் பல சரிந்தன. என்பதை இப்போது நாம் புரிந்து கொள்ளவேண்டும். நம் நாட்டு பழமரங்கள் அழுகும்போது, ​​வெளிநாடுகளில் இருந்து வரும் ஆப்பிள், ஆரஞ்சு பழங்களை பார்த்துக்கொண்டிருக்கிறோம். நம்நாட்டில் விளையும் பச்சைப்பயறு மற்றும் கௌபியை விற்கமுடியாமல், சேனை விவசாயிகள் தவித்துவருகின்றனர். அப்படி இருந்தும் பருப்பு இறக்குமதி செய்யப்படுகிறது. இப்போதே இந்த முறையை நிறுத்திவிட்டு, இந்த டாலர் நெருக்கடியை நமது உள்ளூர் தயாரிப்புகளை மேம்படுத்துவதற்கான வாய்ப்பாக பயன்படுத்திக்கொள்ளுங்கள்” என்று மேலும்கூறினார்

© Provincial Planning Secretariat - EPC

https://suaralama.info/ loker situbondo slot gacor https://simluh.pertanian.go.id/assets/img/storage/data/situs-togel-terpercaya/