வேலைத்திட்டம் 17/03/2022 அன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது. ஜனாதிபதி கோட்டாபயராஜபக்ஷவின் "செழிப்பின்பார்வை" கொள்கை அறிக்கையில் தேசியவனப்பகுதி 30% ஆக அதிகரிக்கும் முன்மொழிவு உள்ளது இதன்அடிப்படையில் நேச்சர் சீக்ரெட்ஸ் பணிப்பாளர், அவர்கள்ஒரு தொகுதி மூலிகை செடிகளை அன்பளிப்பாக வழங்கிவைத்தார்.
இந்நிகழ்வில் பாடசாலை மாணவர்களுக்கான மருத்துவ தாவரங்கள் வழங்கி வைக்கப்பட்டது. சுதேசி இன குழுமத் தலைவர் உருவரிகே வன்னில அத்தன், நாவிதன் வெளி இராணுவமுகாமின் கட்டளை அதிகாரி, மஹா ஓயா சிவில் பாதுகாப்புபடையின் கட்டளை அதிகாரி, மஹாஓயாபிரதேசசபை தலைவர், மஹாஓயாபிரதேசசெயலாளர், நேச்சர் சீக்ரெட்ஸ் திட்டப்பணிப்பாளர், மாகாண வீதிப் போக்குவரத்து அதிகார சபையின் மாகாண உத்தியோகத்தர் திரு மற்றும் திருமதி பிரதீப்தென்னகோன் ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.