E1M1 24 05 2022

கிழக்கு மாகாண ஆளுநரின் விசேட அழைப்பின் பேரில் இலங்கைக்கான சீன தூதுவர் QI Zhenhong 24-05-2022 அன்று வருகை தந்துள்ளார்.

தற்போதைய பொருளாதார நெருக்கடியை சமாளிக்க இலங்கைக்கு உதவும் வகையில் சீன அரசாங்கம் 76 மில்லியன் அமெரிக்க டொலர்களை உதவியாக வழங்கும் என இலங்கைக்கான சீன தூதுவர் QI Zhenhong தெரிவித்துள்ளார்.

கிழக்கு மாகாண கௌரவ ஆளுநர் அனுராதா யஹம்பத்துடன் திருகோணமலையிலுள்ள ஆளுநர் அலுவலகத்தில் 24-05-2022 அன்று இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் போது இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால நட்புறவை வலுப்படுத்தும் வகையில் மேலும் பொருளாதார சலுகைகள் வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

இதேவேளை, கிழக்கு மாகாணத்தில் உள்ள குறைந்த வருமானம் பெறும் மக்களுக்கு சீன அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட 10,000 உலர் உணவுப் பைகள் கொண்ட 5,000 பைகளை திருகோணமலை மாவட்ட மக்களுக்கு தூதுவர் அடையாளமாக வழங்கினார்.

கிழக்கு மாகாணமானது இயற்கை வளங்கள் நிறைந்த பிரதேசம் எனவும் சுற்றுலாத்துறை அபிவிருத்திக்கு அதிக இடவசதி உள்ளதாகவும் சீன முதலீட்டாளர்களுக்கு கிழக்கு மாகாணத்தில் முதலீடு செய்வதற்கு இது ஓர் வாய்ப்பு இருப்பதாகவும், அவர்களை அழைப்பதற்கு இது ஒரு சிறந்த தருணமாக அமையும் என்றும் ஆளுநர் தெரிவித்தார்.

கிழக்கு மாகாணத்தில் முதலீடு செய்வதன் மூலம் அபிவிருத்தி செய்யக்கூடிய வளங்கள் குறித்து சீனத் தூதுவர் மற்றும் அவரது குழுவினருக்கு விளக்கமளிக்கப்பட்டது. மேலும், புதிய முதலீடுகளை மேற்கொள்ளக்கூடிய மாகாணத்தின் வளங்கள் தொடர்பிலான விசேட தகவல்கள் அடங்கிய புத்தகத்தையும் ஆளுநர் தூதுவரிடம் கையளித்தார்.

இந்நிகழ்வில் மாகாண பிரதம செயலாளர் துசித பி.வணிகசிங்க, திருகோணமலை மாவட்ட செயலாளர் பீ.எச்.எம். ஜெயவிக்ரம, ஆளுநரின் செயலாளர் எல்.பி.மதநாயக்க மற்றும் சீன வர்த்தக சங்கத்தின் முதலீட்டாளர்கள் குழுவும் கலந்துகொண்டனர்.

E1M2 24 05 2022E1M3 24 05 2022

 

 E1M4 24 05 2022E1M5 24 05 2022

© Provincial Planning Secretariat - EPC