கிழக்கு மாகாண தொழில்துறைத்திணைக்களத்தினால் வருடாந்தம் நடாத்தப்படும் மலரும் கிழக்கு என்ற தொனிப் பொருளிலான மாபெரும் கண்காட்சியானது இந்த வருடம் செப்டம்பர் மாதம் 20, 21, 22 ஆம் திகதகளில் திருகோணமலை செல்வநாயகபுரத்தில் அமைந்துள்ள தொழில்துறைத்திணைக்கள வளாகத்தில் நடாத்தப்பட்டது.
கிழக்கு மாகாண மாவட்டங்களின் உள்ளூர் உற்பத்தி மற்றும் சிறுகைத்தொழில் முயற்சியாளர்கள் திணைக்களத்தின் நிலைய போதனாசிரியர்கள், தேசிய அருங்கலைகள் பேரவையினால் பதியப்பட்ட கைவினைஞர்கள் ஆகியோரின் பங்குபற்றுதலுடன் கைத்தறி நெசவு உற்பத்திகள், களி மண் உற்பத்திகள், தும்பு ஓலை சார்ந்த உற்பத்திகள், உலோகக் கைப்பணிப்பொருள்கள், ஆடை ஆபரணங்கள், சிப்பியிலான கைப்பணிப்பொருள்கள், மர உற்பத்திகள், தோற்பொருட்கள், உணவு பதனிடல், அலங்கார கல்லினால் செய்யப்பட்ட உற்பத்திப் பொருட்கள் என்பன இந்தக் கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டன.
மேலும் உள்ளுர் உற்பத்தியாளர்களை ஊக்குவிக்கும் முகமாகவும், சந்தைப்படுத்துவதற்கு ஏதுவாகவும் இலவசமாக கண்காட்சி கூடாரங்கள் மற்றும் செயன்முறை கூடாரங்களும் ஒழுங்குபடுத்தப்பட்டு வழங்கப்பட்டன.
இக் கண்காட்சியின் ஆரம்ப வைபவம் செப்டெம்பர் 20ஆம் திகதி வியாழக்கிழமை மாலை 3.00 மணியளவில் கிழக்கு மாகாண கௌவர ஆளுநர் ரோகித போகொல்லாகம அவர்களினால் உத்தியோக
பூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.