E1M1 12 01 2021

கிழக்கு மாகாணக் கல்விப் பணிப்பாளர் மற்றும் வலயக் கல்விப் பணிப்பாளர்கள் கலந்து கொண்ட விசேட கூட்டமொன்று 12.01.2021 இல் கல்வி அமைச்சின் மாநாட்டு மண்டபத்தில் அமைச்சின் செயலாளர் திரு. எம்.சி.எல். பெர்னான்டோ அவர்கள் தலைமையில் இடம்பெற்றது.

அரசாங்கத்தின் புதிய திட்டமான முதலாம் தர மாணவர்களுக்கு பழமரக் கன்றுகள் வழங்குதல் தொடர்பான விளக்கம் கொழும்பிலிருந்து வருகை தந்திருந்த கமத்தொழில் அமைச்சு அதிகாரிகளால் வழங்கப்பட்டது.

இதேபோல கிழக்கு மாகாண பாடசாலைகளில் சூரிய மின்சக்தி வழங்கும் திட்டம் தொடர்பான விளக்கம் சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் உத்தியோகத்தர்களால் வழங்கப்பட்டது.

பிரதம செயலாளர் சார்பாக இக்கூட்டத்தில் கலந்து கொண்ட பிரதிப் பிரதமச் செயலாளர் (நிர்வாகம்) H.E.M.W.G. திசாநாயக்க அவர்கள் பிரதம செயலாளர் அவர்களின் பல்வேறு செய்திகளை வலயக் கல்விப் பணிப்பாளர்களுக்கு தெரிவித்தார்.

அடுத்து கிழக்கு மாகாணக் கல்விப் பெறுபேறுகளின் நிலை அதனை முன்னேற்றுவதற்கான வழிவகைகள் என்பன குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

 

 

E1M2 12 01 2021E1M3 12 01 2021

  

© Provincial Planning Secretariat - EPC