2020 ஆம் ஆண்டு நடைமுறைப்படுத்தப்பட்ட வீதி அபிவிருத்தி நடவடிக்கைகள் மற்றும் 2021 ஆண்டு முன்மொழியப்பட்ட வீதி அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பான கலந்துரையாடல் மாகாண வீதி அபிவிருத்தி திணைக்களத்தின் (மட்டக்களப்பு) கேட்போர் கூடத்தில் 11.02.2021 அன்று கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் திரு. ஐ.மு.பு. முதுபண்டா அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சின் புதிய செயலாளராக திரு I.K.G. முத்துபண்டா 2021.01.05 அன்று கடமையினைப் பொறுப்பேற்றுக்கொண்டார்.
சமயத் தலைவர்களின் ஆசியுடன் இடம்பெற்ற இக் கடமையேற்பு வைபவத்தில் கௌரவ ஆளுநரின் செயலாளர், அமைச்சின் உதவிச் செயலாளர் மற்றும் உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.