மட்டக்களப்பு மாவட்டத்தில் சுற்றுலாத்துறை தொடர்பான பிரச்சினைகளை இனங்காணுதல் மற்றும் அதற்கான தீர்வுகள் எனும் தலைப்பிலான கலந்துரையாடல் கிழக்கு மாகாண சுற்றுலாத்துறை தவிசாளர் ரரி.ஹரிபிரதாப் தலைமையில் மட்டக்களப்பு சர்வோதயா அமைப்பின் மண்டபத்தில் இடம்பெற்றது.
ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷவின் எண்ணக்கருவின் பேண்தகு அபிவிருத்தி திட்டத்தின் மூலம் கிழக்கு மாகாணத்தில் சுற்றுலாத்துறையை அபிவிருத்தி செய்யும் வகையில் வாகரை சல்லித்தீவு கடற்கரை பகுதியினை பார்வையிடும் நிகழ்வு இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற போது கலந்து கொண்டு மேற்சொன்னவாறு தெரிவித்தார்.