மட்டக்களப்பு மாவட்டத்தில் சுற்றுலாத்துறை தொடர்பான பிரச்சினைகளை இனங்காணுதல் மற்றும் அதற்கான தீர்வுகள் எனும் தலைப்பிலான கலந்துரையாடல் கிழக்கு மாகாண சுற்றுலாத்துறை தவிசாளர் ரரி.ஹரிபிரதாப் தலைமையில் மட்டக்களப்பு சர்வோதயா அமைப்பின் மண்டபத்தில் இடம்பெற்றது.மட்டக்களப்பு மாவட்டத்தில் சுற்றுலாத்துறை தொடர்பான பிரச்சினைகளை இனங்காணுதல் மற்றும் அதற்கான தீர்வுகள் எனும் தலைப்பிலான கலந்துரையாடல் கிழக்கு மாகாண சுற்றுலாத்துறை தவிசாளர் ரரி.ஹரிபிரதாப் தலைமையில் மட்டக்களப்பு சர்வோதயா அமைப்பின் மண்டபத்தில் இடம்பெற்றது.
கிழக்கு மாகாணத்தின் சுற்றுலாப் பணியகத்தின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு சர்வோதயாவில் இடம்பெற்ற இந்த கலந்துரையாடலில் மட்டக்களப்பு சுற்றுலா அபிவிருத்தி சங்கத்தினர்கள், கிழக்கு மாகாண சுற்றுலாப் பணியக தவிசாளர் ரரி.ஹரிபிரதாப், பொது முகாமையாளர் கலாநிதி ஆர்.ஞானசேகர் மற்றும் பணிப்பாளர் சபை உறுப்பினர். என்.ஏ.நிரோஷன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதன் போது பல பிரச்சினைகள்,ஆலோசனைகள் முன்வைக்கப்பட்டதுடன் மேலதிகமான சுற்றுலா தலங்களும் அமைப்பது மற்றும் அபிவிருத்தி பணிகள் தொடர்பாக ஆராயப்பட்டது