கிழக்கு மாகாண சுற்றுலாத்துறை பணியகத்தின் முன்னோடி நடவடிக்கையாக Visit East Sri Lanka” என்ற நாமத்துடன் டிஜிடல் சந்தைப்படுத்தல் சுற்றுலாத்துறை பிரசார நடவடிக்கையின் அங்குரார்ப்பன வைபவம் கிழக்கு மாகாண ஆளுநர் கௌரவ அனுராதா யஹம்பத் அவர்களினால் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. இந் நிகழ்வு கடந்த 23.01.2020 அன்று ஆளுநர் செயலகத்தில் இடம்பெற்றது. இதன்போது கிழக்கு மாகாண சுற்றுலாத்துறை பணியகத்தினால் வடிவமைக்கபட்ட சுற்றுலாத்துறை வழிகாட்டித் தகவல்கள் அடங்கிய இணையத் தளமும், கிழக்கின் சுற்றுலாத் தளங்கள் சம்பந்தமான காணொளிகள் அடங்கிய இறுவட்டு மற்றும் சுற்றுலாத்துறை வழிகாட்டிக் கைநூல் ஒன்றும் ஆளுநர் அவர்களினால் உத்தியோகபூர்வமாக வெளியிட்டு வைக்கப்பட்டது.
திருகோணமலை மாவட்டத்திலுள்ள சுற்றுலாத்துறை சேவை வழங்குனர்களின்; திறனை விருத்தி செய்தல் தொடர்பான 03 நாட்கள் பயிற்சி நெறி திருகோணமலை குளக்கோட்டம் பயிற்சி நிலையத்தில் நடைபெற்றது.
இப் பயிற்சி நெறியின் ஆரம்ப வைபவத்தில் சுற்றுலாப் பணியகத்தின் பொது முகாமையாளர் A.S.M.Fayis உட்பட அவுஸ்ரேலிய தொண்டர் Ms.Lisa Whyte சுற்றுலாத்துறை நிபுணன் Mr.Pascal Gavotto சுற்றுலாப் பணியகத்தின் அபிவிருத்தி உத்தியோகத்தர் Mr.Yaseer ஆகியோர் பங்கு பற்றினர்.