கௌரவ ஆளுநரின் பணிப்புரையின் கீழ், கிழக்கு மாகாணத்தில் காணப்படும் சுற்றுலா தலங்கள்; தொடர்பான 17 நிமிடங்களைக்கொண்ட ஆவணப்படம் கிழக்கு மாகாண சுற்றுலா பணியகத்தினால் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
இது சுற்றுலா துறையை மேம்படுத்தும் நோக்கிலும் கிழக்கு மாகாணத்தில் சுற்றுலா பயணிகளின் வருகையினை அதிகரிக்கும் நோக்கிலும் இது தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த குறும்படத்தில் கிழக்கு மாகாணத்தில் காணப்படும் 45 முக்கிய சுற்றுலா பிரதேசங்கள் பதிவு செய்யப்படுள்ளது.
கௌரவ ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் அவர்களின் பணிப்புரையின் கீழ் சர்வதேச சுற்றுலா பயணிகளைக் கவரச்செய்து மேலும் அவர்களதுவருகையை கிழக்கில் உறுதி செய்யும் வகையில் “Raid Amazons” எனும் 19வது சர்வதேச நிகழ்வை கிழக்கு மாகாண சுற்றுலா பணியகம் முன்னின்று நடாத்தவுள்ளது.
இந்நிகழ்வானது மார்ச் 23 தொடக்கம் 31ஆம் திகதி வரை கிழக்கில் குறிப்பாக பாசிக்குடா தொப்பிகல மற்றும் கல்குடா ஆகிய பகுதிகளில் இடம்பெறவிருக்கிறது. முப்படையின் பாதுகாப்பு உதவியோடு கிழக்கு மாகாணத்திற்கு பெருமை சேர்க்கும் வகையில் இந்நிகழ்வானது அமைய இருக்கிறது.இந்நிகழ்வில் ஐரோப்பாவை சேர்ந்த 300க்கு மேற்பட்ட பெண் வீராங்கனைகள் பங்குபற்றவுள்ளனர். Raid Amazons 18வது நிகழ்வானது சென்ற ஆண்டு இலங்கையில் கிழக்கு மாகாணத்தில் நடைபெற்றது